நல்வரவு

வணக்கம் !

Friday 29 December 2017

என் பார்வையில் - "மனம் சுடும் தோட்டாக்கள்," – கவிதைத் தொகுப்பு



கவிஞர் மு.கீதா (தேவதா தமிழ்)
காகிதம் பதிப்பகம்
(மாற்றுத்திறன் நண்பர்கள் நடத்துவது)
+91 8903279618
விலை ரூ100/-.

2015 ஆம் ஆண்டு புதுக்கோட்டை பதிவர் விழா, மிகச்சிறப்பாக நடந்தேற, முக்கிய பங்காற்றியவர்களுள், இந்நூலாசிரியர்  மு.கீதாவும் ஒருவர்.   மனிதநேயமிக்க அரசுப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் இவர், சமூகப் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது தெருவில் இறங்கிப் போராடும், களப்போராளியும் கூட.  வாரா வாரம் புதுகையில் வீதி இலக்கியச் சந்திப்பு நடத்துவதிலும், சிறப்பான பங்களிப்பைச் செய்து வருகிறார்.

Friday 15 December 2017

தப்புக்கணக்கு - சிறுகதை



எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவு சிறுகதைப் போட்டியின் முடிவில் வெளியிடப்பட்ட ‘வசீரும் லீலாவதியும்,’ என்ற தொகுப்பு நூலில், இடம் பெற்ற என் கதை:-

தப்புக்கணக்கு

அப்பாவின் இதயத் துடிப்பு சீராக இல்லை என்பதைத் தொடர்ந்து பீப் ஒலி மூலம் அறிவித்துக்கொண்டிருந்தது,  ஒரு கருவி.  செயற்கை சுவாசம், இரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க, அவரைச் சுற்றிலும் எண்ணற்ற கருவிகள்.  அவற்றின் உதவியால் அப்பாவின் உயிரைப் போக விடாமல், இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது, இம்மருத்துவமனை. 

சிவராமனுக்கு ஆயாசமாக இருந்தது.  ஒருமாதத்துக்கு மேலாக, வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைவது பெரும்பாடாயிருக்கவே, மனைவியிடம் வாய்விட்டே சொல்லிவிட்டான் சீக்கிரம் செத்துத் தொலைத்தால் தேவலை,” என்று.

அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நாளைக்கு நம்ம கதி என்னாகும்னு தெரியாது.  பெத்தவங்களுக்குச் செய்யறது புண்ணியம் அப்பத்தான் நமக்கு நல்ல கதி கெடைக்கும் புடிக்கலேன்னாலும், பெத்த அப்பாவுக்குப் புள்ளை செய்யற கடமைன்னு, ஒன்னு இருக்கு; அத மறக்கக் கூடாது; ஒங்க வெறுப்பைக் காட்டறதுக்கு, இது நேரமில்லே,” என்றாள் அமுதா.

ஆமா பெத்த அப்பா.  அவருக்கு என்மேல கொஞ்சங்கூட பாசம் கிடையாதுதம்பியைத் தான் அவருக்கு ரொம்பப் புடிக்கும். எங்கிட்ட அன்பா இருந்தது, அம்மா மட்டும் தான் அவங்களுக்குச் செஞ்சாலும் புண்ணியம் உண்டு.  ஆனா அதுக்கு வாய்ப்பே கொடுக்காம, பொசுக்குன்னு போயிட்டாங்க அம்மா இருந்திருந்தா, அவங்களை அங்க விட்டுட்டு, நான் கம்பி நீட்டியிருப்பேன்.  வேற வழியில்லாம, என் தலைவிதியை நொந்துக்கிட்டு, அந்த ஆஸ்பத்திரி மருந்து நாத்தத்துல, ஒக்கார்ந்து கிடக்க வேண்டியிருக்கு.  சரி டிபனை கொடு நான் கெளம்பறேன்.  மணி ஆறாயிடுச்சி ஏன் கண்ணன் இன்னும் வீட்டுக்கு வரலை?”.

Monday 11 December 2017

எல்லோருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்து!

எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து!

பணிச்சுமை மற்றும் குடும்பச்சூழல் காரணமாக, இந்த ஆண்டில் என்னால் வலைப்பக்கம் அதிகம் வரவியலவில்லை.  

2018 ஆம் ஆண்டிலாவது தொடர்ந்து எழுத வேண்டும் என ஒவ்வொரு புத்தாண்டின் போதும், எடுக்கும் சபதம் போல், இப்போதும் எடுத்திருக்கிறேன்.

இடைப்பட்ட காலத்தில் சில சிறுகதைப்போட்டிகளில் கலந்து கொண்டேன்.  மறைந்த எழுத்தாளர் திரு.க.சீ..சிவக்குமார் நினைவுச் சிறுகதைப் போட்டியில் வளரும் எழுத்தாளர் பிரிவில் முதற் பரிசு கிடைத்தது.

நம் பதிவுலக நண்பர் திரு வே. நடனசபாபதி அவர்களின் அண்ணன் பெயரில் இளவேனில் பதிப்பகம் நடத்திய வே.சபாநாயகம் நினைவுச் சிறுகதைப்போட்டிக்காக நான் எழுதிய தப்புக்கணக்கு, என்ற கதை, நான்காவதாகத் தேர்வு பெற்று வசீரும் லீலாவதியும், என்ற தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கைச்சட்டம் பதிப்பகம் நடத்திய வானதி விருது சிறுகதைப்போட்டிக்காக எழுதிய பித்து என்ற கதை, இவளப் பிடிக்கல,’ என்ற தொகுப்பு நூலில் வெளியாகியுள்ளது.

அந்நியன், என்ற கதை, நவம்பர் 2017 கணையாழியில் வெளிவந்துள்ளது.

இனி ‘அந்நியன், கதை அடுத்த பதிவில்....

வழக்கம் போல், என் கதைகள் பற்றிய, உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து...


நன்றியுடன்,

ஞா.கலையரசி

Monday 3 April 2017

என் பார்வையில் - 'சின்னவள் சிரிக்கிறாள்,' - கவிதைத் தொகுப்பு

ஆசிரியர்:- திரு மீரா செல்வகுமார்

காகிதம் பதிப்பகம், நெய்வேலி.
கைபேசி:-  8903279618

பெண் குழந்தையைச் சுமையாகக் கருதி, கருக்கொலையோ சிசுக்கொலையோ செய்யும் தமிழ்ச் சமூகத்தில், ‘அந்திவானின் செவ்வொளிக் கீற்று,’ என்றும், சிறு சிரிப்பில், உயிர் ஒளித்து வைக்கும் தேவதையென்றும், நூல்முழுக்க மகளின் புகழ் பாடும், இது போன்றதொரு  கவிதைத் தொகுப்பு, ஏற்கெனவே தமிழில் வெளியாகியிருக்கிறதா எனத் தெரியவில்லை. ஏனெனில், நான் படித்த கவிதை நூல்கள் மிகச்சிலவே.

தந்தைக்கு மகள் மீதான அபரிமித பாசம், பல கவிதைகளில் உணர்ச்சிப் பிரவாகமாக, அடிமனதின் ஆழத்திலிருந்து, ஊற்றெடுத்துப் பொங்கிப் பாய்கின்றது.

Saturday 1 April 2017

தட்டச்சு நினைவுகள்

                                                     (படம் - நன்றி இணையம்)

பிரபல பதிவரான திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள், சும்மா என்ற தம் வலைப்பூவில், சாட்டர்டே ஜாலி கார்னர் என்ற பகுதியில், தட்டச்சு நினைவுகள் பற்றிய  என் கட்டுரையை, இன்று வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார். அவருக்கு என் இதயங்கனிந்த நன்றி.  
மேலும் படிக்க..

Friday 24 March 2017

என் பார்வையில் - 'பாட்டன் காட்டைத் தேடி,' கவிதைத்தொகுப்பு

அமெரிக்க வாழ் கவிஞர் கிரேஸ் பிரதிபாவின், இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. அண்மையில் புஸ்தகா டிஜிட்டல் மீடியா மின்னூலாக வெளியிட்டுள்ளது. இவருடைய முதல் நூல்:- துளிர்விடும் விதைகள்.

இவரின் வலைப்பூ, தேன்மதுரத் தமிழ்  சங்கத் தமிழிலக்கியத்தை, ஆங்கில மொழியாக்கம் செய்யும் அரும்பணியிலும், ஈடுபட்டிருக்கிறார்.

Wednesday 15 March 2017

புஸ்தகாவில் என் மின்னூல்கள்!


(படம் - நன்றி இணையம்)

ம் எழுத்தை அச்சில் பார்ப்பதை விட, எழுதுபவருக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வேறுண்டா?.

Friday 10 March 2017

என் பார்வையில் – ‘எங்கெங்கும்.. எப்போதும்…என்னோடு,’ (சிறுகதைத் தொகுப்பு)



ஆசிரியர்:- திரு. வை. கோபாலகிருஷ்ணன்.
மணிமேகலைப் பிரசுரம்.

திரு கோபு சாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான இந்நூலில், 15 கதைகள் உள்ளன.  ஏற்கெனவே அவருடைய இரு நூல்கள் பற்றி, எழுதியிருக்கிறேன். 

அவற்றுக்கான இணைப்புகள்:-

எங்கெங்கும்..எப்போதும்என்னோடு,’ என்ற கதையில் உடல் எடையைக் குறைக்க, டாக்டரின் அறிவுரைப்படி நடைபயணம் மேற்கொள்பவரின் செய்கைகள், நகைச்சுவை இழையோட, நேர்முக வர்ணனையாகக் கொடுக்கப்பட்டுள்ளன

Saturday 25 February 2017

என் பார்வையில் - வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் (சிறுகதைத் தொகுப்பு)



ஆசிரியர்:- திரு. வை.கோபாலகிருஷ்ணன்
வெளியீடு:- திருவரசு புத்தக நிலையம்

திரு வை.கோபு சாரின் இரண்டாவது தொகுப்பான இதில், 14 சிறுகதைகள் உள்ளன.

Thursday 23 February 2017

என் பார்வையில்- தாயுமானவள் (சிறுகதைத் தொகுப்பு)


ஆசிரியர்திரு வை.கோபாலகிருஷ்ணன்
வானதி பதிப்பகம்சென்னை
விலை ரூ 45/-

கோபு சார் என்றழைக்கப்படும் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வலையுலகில் மிகவும் பிரபலமானவர்பத்து மாதங்கள், வெற்றிகரமாக சிறுகதை விமர்சனப் போட்டி நடத்திப் பரிசு என்ற பெயரில், ஓய்வூதியப் பணத்தை வாரியிறைத்துப் பதிவர்களின், விமர்சனத் திறமையை வெளிக் கொணர்ந்து, பட்டை தீட்டியவர். 

Thursday 16 February 2017

என் பார்வையில் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே'



சிரியர்:- கவிஞர் நா.முத்துநிலவன்
வெளியீடு:- அகரம், தஞ்சாவூர்.

பல்வேறு காலங்களில் தினமணி, ஜனசக்தி முதலிய நாளிதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே, இந்நூல்.

மாணவர்களின் பாட்டு, ஓவியம், பேச்சு, எழுத்து, குழுவாகச் செயல்படுவது முதலிய பன்முகத் திறமைகளுக்கு மதிப்பளிக்காது, மதிப்பெண் ஒன்றை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு, அவர்களின் திறமையை மதிப்பீடு செய்யும், இக்காலக் கல்வியின் அவல நிலையையும், மாணவர்களின் மீது வன்முறையைப் பிரயோகித்து, அதிக மதிப்பெண் எடுக்க வைக்கத் தனியார் கல்வி நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனத்தையும், கடந்த ஆண்டு, வெளியான ‘அப்பாதிரைப்படம், வெளிச்சம் போட்டுக்காட்டி அதிர்வலையை ஏற்படுத்தியது

Tuesday 24 January 2017

போராளிகளுக்கு வீரவணக்கம்!

ஏழு நாட்கள் கடுங்குளிரில், வெயிலில் கஷ்டப்பட்டு, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வுக்காகப் போராடிய, அத்தனைப் போராளிகளுக்கும், வீரவணக்கம்!

பொதுப் பிரச்சினைக்காக வீதியில் இறங்கிய ஒரு வாரத்துக்குள், அரசுக்குக் கடும் நெருக்குதல் கொடுத்து, நிரந்தரத் தீர்வு கண்டது இமாலயச் சாதனை!

Friday 20 January 2017

நம்பிக்கையூட்டும் இளைஞர் எழுச்சி


இளைஞர்களுக்கு நம் கலாச்சாரம் தெரியவில்லை; பாரம்பரிய உணவு வகைகளைப் புறந்தள்ளி பீட்ஸா, பர்கர் தின்பவர்கள்; முகநூலில் முகம் தொலைப்பவர்கள், வார இறுதியில் குடித்து விட்டுக் கூத்தடிப்பவர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களை, முறியடிக்கும் விதமாக, நம் இளைய சமுதாயம், ஜல்லிக்கட்டு விஷயத்தில், பொறுத்தது போதும் எனப் பொங்கி எழுந்திருக்கிறது.